நடிகர் நாகர்ஜூனா:
தொழில் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக இருந்து வருபவர்தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் லக்ஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். லட்சுமிக்கு பிறந்த மகன் நாக சைதன்யா.

நாகா சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த அவருக்கு வருகிற டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
இரண்டாவது மகன் திருமணம்:
இதனிடையே அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகர் நாகார்ஜுனா அவருக்கு பிறந்த மகன் தான் அகில். இவரும் தெலுங்கு சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். அகிலுக்கு ஏற்கனவே ஒரு நிச்சயதார்த்தம் நடந்தது திருமணம் வரை சென்று அது நடைபெறாமல் நின்று போனது.

அதை எடுத்து ஓவியர் ஜெயினர் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கும் சம்மதம் தெரிவித்த நாகார்ஜுனா தற்போது தனது இரண்டு மகன்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது .
ஒரே மேடையில் இரண்டு திருமணம்:
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் நாகார்ஜூனா ஒரே நாளில் ஒரே மேடையில் இருவரது திருமணமும் நடக்காது. அகில் திருமணத்தை பிறகு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அகிலை நினைத்து ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

அகிலிற்கு மனைவியாக போகும் ஜெய்னப் ரொம்பவே நல்ல பெண். அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக போவதை நினைத்து எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது இளைய மகன் குறித்தும் பேசி இருக்கிறார். இதனால் நாகார்ஜுனா வீட்டில் அடுத்தடுத்து திருமண கொண்டாட்டம் களைக்கட்ட போகிறது.