தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு மருமகன் ஆனார். பின்னர் ரஜினியின் சிபாரிசில் பல திரைப்படங்களில் நடித்து வந்த தனுஷுக்கு தொடர்ந்து அடுத்த வெற்றிகள் மிகப்பெரிய உச்சத்தை கொடுத்தது.

இதனிடையே அவர் தன்னுடைய திறமையும் வளர்த்துக்கொண்டு பின்னர் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே திடீரென தன்னுடைய மனைவிவியை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்து வாழ போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
மகன்கள் இனி யார் பொறுப்பு?:
பின்னர் அண்மையில் தான் இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட சமயத்தில் அவரது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இனிமேல் யாரின் பொறுப்பில் வளர்வார்கள்? என்ற ஒரு கேள்வி எழுந்து வந்தது.

அதன்படி தாங்கள் பிரிந்து போவதாக அறிவித்த பின்னரில் இருந்தே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே எப்படி யாத்ரா லிங்காவை வளர்த்து பார்த்து வருகிறார்களோ அதே போலவே இனிவரும் காலங்களிலும் அவர்கள் இருவருமே சேர்ந்து பார்த்துக் கொள்வார்கள் என கோர்ட்டு நீதி வழங்கியிருக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் பிள்ளைகளுக்காவது இவர்கள் இருவரும் சேர்வார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.