எதிரிகளாக – சிம்பு தனுஷ்:
கோலிவுட் சினிமாவில் பயங்கர எதிரிகளாக நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இவர்கள் இருவரது திரைப்படங்களும் ஒரே நேரத்தில் போட்டிக்கொண்டு வெளியாகும் வசூலிலும் இவர் அதிகம் வசூல் செய்தார் அவர் அதிக வசூல் செய்தார் என்றுதான் விவரமும் வெளியாகும்.

அந்த அளவுக்கு இவர்கள் சினிமா துறையில் பெரும் போட்டியான நடிகர்களாக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் தற்போது திருமணம் ஒன்றில் இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்டு பேசிய புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமணத்தில் சந்திப்பு:
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரின் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அரவணைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இது வெளியிலே எல்லாருமே நாங்க பயங்கரமான எதிரிகள் அப்படின்னு நினைச்சிட்டு இருக்காங்க உண்மை என்னன்னா நாங்க எதிரிகள் தான்… அது வெளியில்… ஆனால் உள்ள நல்ல நண்பர்கள் என்று இருவரும் சிரித்துக்கொண்டே கூறுகிறார்கள்.

நாங்கள் எதிரிகள் இல்லை:
தற்போது இந்த பழைய வீடியோ வெளியாகி சமீபத்திய புகைப்படங்களுடன் அதை உறுதி செய்திருக்கிறது. இவர்கள் இருவரும் நட்பாக தான் பழகி வருகிறார்கள் என்பதை மீண்டும் தன் ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். மேலும் இந்த சந்திப்பின்போது சிம்பு நடிகர் தனுஷிடம் நயன்தாராவின் விஷயம் குறித்து கிண்டலாக கேட்டிருப்பார் போல அதனால் தான் அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் யூகித்து வருகிறார். இதோ இந்த வீடியோ: