இறுதிகட்ட படப்பிடிப்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அஜித்குமாருடன் திரிஷா, அர்ஜூன், ரெஜினா கஸிண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற பொங்கல் தினத்தன்று இத்திரைப்படம் வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

திடீரென நுழைந்த பிரபல நடிகை
இந்த நிலையில் லைகா நிறுவனம் “விடாமுயற்சி” திரைப்படம் குறித்து தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான ரம்யா “விடாமுயற்சி” திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரம்யா இளைஞர்களை மிகவும் கவர்ந்த ஒரு தொகுப்பாளினி. இவர் ராதா மோகன் இயக்கிய “மொழி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து “மங்காத்தா”, “ஓ காதல் கண்மணி”, “வனமகன்”, “மாஸ்டர்”, “கேம் ஓவர்”, “ரசவாதி” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.