கனவுக்கன்னி
தமிழ் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் விஜே ஏஞ்சலின் வாலிபர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் யூட்யூப் பேட்டிகளிலும் சமீப காலமாக முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் ஏஞ்சலின். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளின் வீடியோக்களில் பல ரசிகர்கள் “ஏஞ்சலினை மட்டும் காட்டுங்க. வேற யாரையும் காட்டாதீங்க” என்று கெஞ்சுவது உண்டு. அந்தளவுக்கு வாலிபர்களின் இதயங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் ஏஞ்சலின்.

ஹீரோயினாக களமிறங்கும் ஏஞ்சலின்
இந்த நிலையில் தொகுப்பாளினி ஏஞ்சலின் தற்போது ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். “ மதுரை பையனும் சென்னை பொண்ணும்” என்ற வெப் சீரீஸில் ஏஞ்சலின் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் ஹீரோவாக கண்ணா ரவி நடித்துள்ளார். இந்த வெப் சீரீஸ் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இந்த வெப் சீரிஸை விக்னேஷ் பழனிவேல் இயக்கியுள்ளார்.
