மலையாள சினிமாவில் கௌதம் மேனன்
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக திகழ்ந்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன், தற்போது மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து “Dominic and the Ladies Purse” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் புரோமோஷனிற்காக சில நாட்களாகவே பல யூட்யூப் சேன்னல்களில் பேட்டியளித்து வருகிறார் கௌதம் மேனன்.

அந்த வகையில் நீயா நானா கோபிநாத் கௌதம் மேனனை பேட்டி கண்டார். அப்போது கௌதம் மேனன் தான் இயக்கிய “மின்னலே” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
திரைக்கதையில் விவேக்

“காக்க காக்க திரைப்படத்தின் திரைக்கதைக்காக அனுராக் காஷ்யப்பின் உதவியை நாடினேன். அதே போல் “மின்னலே” திரைப்படத்தின் திரைக்கதையில் நடிகர் விவேக்கின் பங்கு இருந்தது. அவர் எங்களுடன் கதை விவாவதத்தில் கலந்துகொண்டார்” என்ற சுவாரஸ்யமான தகவலை அப்பேட்டியில் பகிர்ந்துள்ளார் கௌதம் மேனன். விவேக் “மின்னலே” திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.