ஸ்டைலிஷ் திரைப்படம்
அஜித்குமார் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய திரைப்படம் “பில்லா”. இத்திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் அஜித்குமாரின் கெரியரில் மிகவும் ஸ்டைலிஷான திரைப்படமாக அமைந்தது. கோலிவுட் திரையுலகையே வாயை பிளக்க வைத்த திரைப்படம் என்று கூட கூறலாம். ஒரு ரீமேக் திரைப்படத்தை இந்தளவுக்கு ஸ்டைலிஷாக கொடுக்க முடியுமா என ஆச்சரியத்தை ஏற்படுத்திய திரைப்படம் அது.

பில்லா திரைப்படம் Flop?
ரஜினிகாந்த் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த “பில்லா” திரைப்படத்தின் ரீமேக்தான் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த “பில்லா” திரைப்படம் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் விஷ்ணுவர்தன் “ஒரு உண்மை தெரியுமா? ரஜினிகாந்த் நடித்த பில்லா படம் அந்த சமயத்தில் சரியாக ஓடவில்லை.

இந்த படத்தையா நாம் ரீமேக் செய்யப்போகிறோம் என உணர்ந்தேன். அதன் பின் இந்த படத்தில் எனக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை பார்க்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு புரிந்தது, அந்த காலகட்டத்திலேயே ஒரு Dark கதாபாத்திரத்தை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள் என்று. அது ஒரு மிக நல்ல ஐடியா” என பகிர்ந்துகொண்டுள்ளார்.