மதகஜராஜா
12 வருடங்களாக கிடப்பில் கிடந்த “மதகஜராஜா” திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இதில் விஷால் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சந்தானம், மயில்சாமி, மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்
நேற்று “மதகஜராஜா” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற நிலையில் மேடையில் பேசிய விஷாலின் கை நடுங்கியது. மேலும் பேச்சில் தடுமாற்றமும் இருந்தது. இதனை பார்த்த பார்வையாளர்கள் பதட்டமடைந்தனர். அந்த சமயத்தில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி “விஷாலுக்கு வைரல் காய்ச்சல்” என்று பத்திரிக்கையாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.
மெடிக்கல் ரிப்போர்ட்
இந்த நிலையில் விஷாலின் உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் என்றும் அவர் பூரண் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார். இந்த மருத்துவ அறிக்கை இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
