எதிர்பாராத வெற்றி
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த “மதகஜராஜா” திரைப்படம் 12 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்தும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த எதிர்பாராத வெற்றியை தமிழ் சினிமா உலகமே ஆச்சரியமாக பார்த்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஷால் பேசியபோது அவருக்கு கை நடுக்கம் இருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்வை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷால் உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என பிரார்த்தித்தனர்.

இனிமே அப்படிதான் பேசுவேன்!
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய விஷால், “நான் இனிமேல் எனது கையில் இருக்கும் மைக்கை ஆட்டிக்கொண்டேதான் பேசுவேன். நான் அன்று கைநடுக்கத்துடன் பேசியது எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள், எத்தனை பேர் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள் என்பதை காட்டியது. மீடியாவுக்கு நன்றி. 4 நிமிடங்களில் இந்த உலகத்தில் எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள் என்பதை நீங்கள் எனக்கு காட்டிவிட்டீர்கள். இனிமேல் எந்த பேட்டியாக இருந்தாலும் நான் மைக்கை ஆட்டிக்கொண்டேதான் பேசுவேன்” என கூறினார்.

விஷால், தான் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.