விக்ரமன்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி
ஏ.ஆர்.ரஹ்மான் விக்ரமன் இயக்கிய “புதிய மன்னர்கள்” என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். இத்திரைப்படத்தில் விக்ரம், மோஹினி, விவேக், தாமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 1994 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் வெகுமக்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றது. எனினும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்தது.

என் தப்புதான்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் விக்ரமன், “புதிய மன்னர்கள்” திரைப்படம் தோல்வியடைந்ததை குறித்து பேசியுள்ளார். “புதிய மன்னர்கள் திரைப்படம் வெற்றிபெறும் என நினைத்தேன். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் படம் பார்த்துவிட்டு படத்தை பற்றி ஒரு விஷயத்தை கூறினார். ஆனால் நான்தான் அதனை கேட்கவில்லை. அது என்னுடைய தப்பு, அதனை இப்போது நான் உணர்கிறேன்.

படத்தில் காமெடி காட்சிகளில் பழைய பாடல்களை பின்னணியாக சேர்த்திருந்தேன். அதனை சுட்டிக்காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான், ‘இது ஒரு சீரீயஸான படம், இந்த காட்சிகள் எல்லாம் இத்திரைப்படத்தை மழுங்கவைக்கிறது. இந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிடுங்கள்’ என கூறினார். ஆனால் நான் அதனை செய்யவில்லை. ரஹ்மான் கூறிய 100% சரி” என்று மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.