90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இயக்குனர்
இயக்குநர் விக்ரமன் 90ஸ் கிட்ஸ் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குனராவார். இவர் இயக்கிய “சூர்ய வம்சம்”, “வானத்தை போல” போன்ற திரைப்படங்கள் இப்போதும் தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்படும் திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விக்ரமன், தான் இயக்கவிருந்து நின்றுப்போன ஜெயராம் திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

புலியுடன் வாக்கிங் போன ஜெயராம்…
அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஜெயராமை வைத்து “ஜாலி டைம்” என்ற காமெடி திரைப்படத்தை விக்ரமன் இயக்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாம். அத்திரைப்படத்தின் பூஜைக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக மிகவும் வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுக்க நினைத்த விக்ரமன், காலையில் ஜெயராம் கடற்கரையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது கையில் புலிக்குட்டியை கூட்டிச்செல்வதாக ஒரு புகைப்படம் எடுத்து அதனை ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடலாம் என நினைத்தாராம்.

அதன் படி பயிற்சியளிக்கப்பட்ட ஒரு புலிக்குட்டியை அழைத்து வந்து அதனை கூட்டிக்கொண்டு ஜெயராம் நடைபயிற்சிக்கு போவது போன்ற ஒரு புகைப்படத்தை எடுத்தார்கள். இந்த புகைப்படம் எடுக்கும்போது ஜெயராம் எங்கே புலி நம்மை கடித்துவிடுமோ என்று பயந்துகொண்டே இருந்தாராம். புலிக்குட்டியும் ஒத்துழைக்க கொஞ்சம் மறுத்ததால் மிகப்பெரிய சிரமத்திற்குப் பிறகு அப்புகைப்படம் எடுக்கப்பட்டதாம். எனினும் அத்திரைப்படம் பூஜையோடு நின்றுபோனதாம்.