Shine ஆகாத நடிகர்
“கும்கி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான விக்ரம் பிரபு, ஒரு சிறந்த இளம் நடிகராக ஜொலிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “கும்கி” திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படமும் அவரது கெரியருக்கு கைக்கொடுக்கவில்லை.

சமீபத்தில் “டாணாக்காரன்”, “இறுக பற்று” போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் விக்ரம் பிரபுவின் கெரியரில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆதலால் தமிழ் சினிமாவின் Shine ஆகாத நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் விக்ரம் பிரபு.
விக்ரம் பிரபுவுக்கு தடையாக இருக்கும் விக்ரம் பிரபு
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி, “விக்ரம் பிரபு சில நல்ல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜி வீட்டு வாரிசாக இருந்தாலும் அவர் பெரிய அளவில்ல் கிளிக் ஆகவில்லை. அதற்கு காரணம் வேறு யாரும் இல்லை, அவரேதான்.

என்ன விஷயம் என்றால், மற்ற ஹீரோக்கள் வாங்குகிற சம்பளத்தை எல்லாம் கேள்விபட்டு விக்ரம் பிரபுவும் எக்குத்தப்பாக சம்பளம் கேட்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இதனால்தான் இவரது திரைப்படங்கள் Flop ஆகி வருகின்றன” என்று கூறியுள்ளார்.