புரட்சி கலைஞர்
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள விஜயகாந்த், காலம் உள்ளவரை மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கக் கூடியவராக திகழ்ந்து வருபவர். உதவி என்று கேட்டு வருபவர்களை வெறும் கையோடு அனுப்பாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதை விட அதிகமாகவே கொடுத்து அனுப்புபவர் விஜயகாந்த். குறிப்பாக பசி என்று வருபவர்களுக்கு உணவளித்து அவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்விப்பவர்.

இந்த நிலையில் தன்னை போல் மிமிக்ரி செய்த நபரை பார்த்து விஜயகாந்த் கோபப்பட்டது குறித்த ஒரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.
சட்டென்று திரும்பிய கேப்டன்…
விஜயகாந்த் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மிமிக்ரி கலைஞர் சேது, மேடையில் விஜயகாந்த் போல் மிமிக்ரி செய்து அங்குள்ள மக்களை ரசிக்க வைத்துக்கொண்டிருந்தாராம். இவர் மிமிக்ரி செய்த நேரமாக பார்த்து விஜயகாந்த் மண்டபத்திற்குள் நுழைந்தாராம்.

அப்போது தன்னை போல் பேசிய சேதுவை பார்த்து சட்டென்று திரும்பினாராம். அவர் கோபமாக திரும்பியதை பார்த்து சேது தனது மைக்கையே கீழே போட்டுவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவலை மிமிக்ரி கலைஞர் சேது ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.