யூட்யூப் நாயகர்கள்
“பரிதாபங்கள்” என்ற யூட்யூப் சேன்னலின் மூலம் தமிழ் யூட்யூப் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருபவர்கள் கோபி-சுதாகர். இந்த இருவரும் முதலில் “மெட்ராஸ் சென்ட்ரல்” என்ற யூட்யூப் சேன்னலில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அதன் பின் இருவரும் இணைந்து தனியாக ஆரம்பித்த தனது “பரிதாபங்கள்” யூட்யூப் சேன்னலின் மூலம் யூட்யூப் உலகில் நாயகர்களாக வலம் வருகின்றனர்.

வெளியே துரத்திய சேன்னல்
பல வருடங்களுக்கு முன்பு கோபி-சுதாகர் ஆகிய இருவரும் விஜய் தொலைக்காட்சியின் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் பங்குகொண்டனர். ஆனால் அவர்களின் நகைச்சுவை திறன் சுமாராக இருப்பதாக கூறி அவர்களை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அதன் பின் யூட்யூப் சேன்னல் மூலம் தற்போது மீம்களின் உலகில் கலக்கிக்கொண்டு வருகிறார்கள்.

விருது வழங்கிய விஜய் டிவி
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் “நீயா நானா” நிகழ்ச்சியின் சார்பாக “நீயா நானா” விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில் கோபி-சுதாகருக்கு விஜய் தொலைக்காட்சி விருது வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் “வெளியே விரட்டிய டிவி சேன்னலே விருது வழங்கும் அளவுக்கு முன்னேறிய கோபி சுதாகருக்கு வாழ்த்துகள்” என்று சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.