கள அரசியலில் விஜய்…
கடந்த ஆண்டு “தமிழக வெற்றிக் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட பிறகு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தேர்தலை சந்திப்பதற்காக விஜய் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் முழுமுதல் முயற்சியாக இந்த சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது.

எனினும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் விஜய் எப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்? என்ற கேள்வியும் ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இன்னும் இரண்டு மாதங்களில்…
இந்த நிலையில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் இது குறித்து பதிலளிக்கையில், “ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது மே மாதம் முதல் வாரத்திற்குள் முடித்துவிடுவதாக விஜய் திட்டமிட்டுள்ளார். ஆதலால் ஜூன் மாதம் முதல் மக்களை அவர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றன” என்று கூறியுள்ளார்.

“ஜனநாயகன்” திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இதில் இருந்து தெரிய வருகிறது.