இளைய தளபதி டூ தளபதி
பெரும்பாலான ரசிகர்களின் இதயங்களை தனது வசீகரமான நடிப்பின் மூலம் கவர்ந்த விஜய், தமிழ் சினிமாவின் இளைய தளபதியாய் உயர்ந்து அதன் பின் தளபதியாய் ரசிகர்களின் இதயங்களில் குடிபுகுந்தார். பற்பல திரைப்படங்களின் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்த விஜய் தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தளபதி டூ தலைவர்
விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதில் இருந்து அவரது பயணம் அரசியலை நோக்கியே இருந்தது. பல அரசியல் விமர்சகர்களும் சினிமா விமர்சகர்களும் ஊகித்த படி அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை தொடங்கினார்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவின் மூலம் தீவிர கள அரசியலில் இறங்கிய விஜய், சமீபத்தில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சம்பவம் அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் பல அரசியல் தலைவர்கள் விஜய்யை விமர்சித்திருந்தாலும் விஜய் தனது அரசியல் பயணத்தில் அடுத்த கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளதாக பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்….
இந்த நிலையில் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலாக தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அந்த சேனலுக்கு வாகை தொலைக்காட்சி என்று பெயர் வைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.