தவெக முதல் பொதுக்குழு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பல செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இவ்விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அணை போட்டு ஆற்றை தடுக்கலாம்,ஆனால்?
“மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே. பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே. செயலிலும் ஆட்சியிலும் அதனை காட்ட வேண்டும் அவர்களே. பாஜகவின் ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என்று அறைக்கூவல் விடுத்துவிட்டு இங்கு நீங்கள் மட்டும் என்ன ஆட்சி செய்கிறீர்கள்? அதே பாசிச ஆட்சிதானே.

நேற்று வந்தவனெல்லாம் முதலமைச்சர் ஆக கனவு காண்கிறான் என்று சொல்கிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று சொல்கிறீர்கள். அப்பறம் எதற்கு எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தவெகவிற்கு கொடுக்குறீர்கள்? அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க வேண்டும் என்று நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று, சூறாவளியாக மாறும். சக்திமிக்க புயலாக கூற மாறும்” என பேசினார். விஜய்யின் இந்த பேச்சை ஆரவாரத்துடன் கைத்தட்டி கூட்டத்தினர் வரவேற்றனர்.