மக்கள் செல்வன்
தமிழ் சினிமாவில் எளிமையாக பழகக்கூடியவர்களில் முதன்மையான குணம் உடையவர் விஜய் சேதுபதி. எந்த விழாவிற்கு சென்றாலும் பொதுமக்களிடம் நலம் விசாரித்து அவர்களை மகிழ்வித்துதான் அங்கிருந்து நகர்வார். இந்த நிலையில் நேற்று ஒரு உடற்பயிற்சி கூடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் விஜய் சேதுபதி. அப்போது அங்கே மேளம் வாசித்த இசைக்குழுவிடம் உரையாடினார் விஜய் சேதுபதி.

நலம் விசாரித்த மக்கள் செல்வன்
அங்கே மேளம் வாசித்தவர்கள் விஜய் சேதுபதியிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டார்களாம். அப்போது அவர்களின் ஊர் பெயர் என அனைத்தையும் விசாரித்துவிட்டு, “பாட்டு வாசிங்க, கேட்கிறேன்” என்று கூறி அவர்களின் இசையை பாராட்டிவிட்டு அவர்களுடன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டுதான் கிளம்பினாராம். அவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.