பாண்டிராஜ்-விஜய் சேதுபதி கூட்டணி
இயக்குனர் பாண்டிராஜ் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இது என தெரிய வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டிலை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதியின் கதாபாத்திரமே டைட்டில்…
அதாவது விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்த கதாபாத்திரத்தின் பெயர் பிரதிபலிக்கும் வகையில் “ஆகாச வீரன்” என்று இத்திரைப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.