கங்குவா தோல்வி
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. இதன் காரணங்களால் சிறுத்தை சிவாவும் சூர்யாவும் சிறிது சோகத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் இதில் சிறுத்தை சிவா தனது நண்பர்களிடம் இது குறித்து புலம்பி வருவதாக கூட தகவல்கள் வருகின்றன.

விஜய் சேதுபதியுடன் சந்திப்பு
இந்த நிலையில் சிறுத்தை சிவா, நடிகர் விஜய் சேதுபதியை படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றே சந்தித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் சேதுபதி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் சில காட்சிகளை சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவிலில் படமாக்கி இருக்கின்றனர்.. அந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்று கேள்விபட்ட விஜய் சேதுபதி, சிறுத்தை சிவாவை தொடர்புகொண்டு “இந்த கோவிலுக்கு வாருங்கள், சக்திவாய்ந்த கோவில்” என்று கூற, உடனே அந்த கோவிலுக்கு கிளம்பி போய்விட்டாராம் சிறுத்தை சிவா.

அங்கு இருவரும் சேர்ந்து தரிசித்துவிட்டு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். ஒரு வேளை சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.