மக்கள் செல்வன் சேதுபதி
தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆங்காங்கே சில திரைப்படங்களில் தோன்றிய விஜய் சேதுபதி, தனது விடாமுயற்சியால் தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக உருமாறி மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்தார். அதுமட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வரும் விஜய் சேதுபது பேன் இந்திய சேதுபதியாக வலம் வருகிறார்.
வில்லனிசம்

விஜய் சேதுபதி “மாஸ்டர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிறகு ”உப்பண்ணா”, “விக்ரம்” போன்ற திரைப்படங்களில் மாஸ் வில்லனாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் மட்டுமே அத்திரைப்படம் வரவேற்பை பெறும் என்ற நிலையும் வந்தது. எனினும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த “மகாராஜா” திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அதனை தொடர்ந்து வில்லனாக நடிப்பதை குறைத்துக்கொள்ளவும் விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
மீண்டும் வில்லன் ரோல்
இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்ததாகவும் அதற்கு விஜய் சேதுபதியும் ஒப்புக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.