விஷாலின் மாபெரும் ஹிட் படம்
2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த திரைப்படம் “சண்டக்கோழி”. இத்திரைப்படத்தில் மீரா ஜாஸ்மீன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விஷாலின் கெரியரில் மிகப் பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது.

பாதியிலேயே நிப்பாட்டச் சொன்ன விஜய்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் லிங்குசாமி, “சண்டக்கோழி” படத்தின் கதையை விஜய்க்கு கூறிய சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.
லிங்குசாமி “சண்டக்கோழி” திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் கூறிக்கொண்டிருந்தபோது முதல் பாதி கதையை கேட்டு முடித்தவுடன் “போதும் நிப்பாட்டுங்க” என்று கூறிவிட்டாராம். “கதை முழுதாக கேட்டுவிங்களேன்” என லிங்குசாமி கேட்டுக்கொண்டபோது, “ராஜ்கிரண் இந்த கதைக்குள் வந்தபிறகு எனக்கு இதுல என்ன இருக்கு” என கேட்டாராம்.

அதன் பின் இந்த கதையை சூர்யாவிடம் கூறியிருக்கிறார். அங்கேயும் வேலைக்கு ஆகவில்லை என ஆன பின்புதான் விஷாலிடம் இந்த கதை போயிருக்கிறது.