நடிகர் To அரசியல்வாதி
நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் வட்டாரங்கள் சூடு பிடித்துள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார் என்பதால் பல அரசியல் செயல்பாடுகளில் விஜய் சமீப நாட்களாக ஈடுபட்டு வருகிறார்.
ஆளுநரை சந்தித்த விஜய்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறித்து இன்று காலை விஜய் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார். அதில், “பெண்களுக்கு ஓர் அண்ணாக அரணாக நிற்பேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சில மணி நேரங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். அண்ணா பல்கலைகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறித்த மனு ஒன்றை ஆளுநரிடம் அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.