விஜய்யின் கடைசி படம்
நடிகர் விஜய் தமிழ்நாட்டு அரசியலில் களமிறங்க உள்ளதால் தனது 69 ஆவது திரைப்படத்தை கடைசி திரைப்படமாக அறிவித்துவிட்டார். இத்திரைப்படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. “ஜனநாயகன்” என்று இத்திரைப்படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர். இந்த டைட்டிலுக்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் விஜய் சாட்டையை சுழற்றியபடி காட்சித் தருகிறார். அவருக்கு அருகில் “நான் ஆணையிட்டால்” என்ற எம்.ஜி.ஆர் பட பாடல் வரி இடம்பெற்றிருந்தது.

இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வரும் நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த டைட்டில் வைத்திருக்கலாம்!
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர், “ஜனநாயகன் என்ற டைட்டில் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?” என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “ஜனநாயகன் என்று பெயர் வைத்ததில் தவறில்லை.

ஆனால் தமிழுக்கு பெயர் வைக்கும்போது மக்கள் நாயகன் என்றும் தெலுங்கில் ஜனநாயகன் என்றும் வைத்திருந்தால் சரியாக இருந்துருக்கும் என்பது என்னுடைய கருத்து” என கூறியுள்ளார். இத்திரைப்படத்திற்கு “நாளைய தீர்ப்பு” என்று டைட்டில் வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என பல ரசிகர்கள் கருதி வருகின்றனர்.