ஜனநாயகன்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை விஜய் எதிர்கொள்ள உள்ள நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!
“ஜனநாயகன்” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதால் அவரது வாக்குவங்கிக்கு இத்திரைப்படம் நிச்சயமாக உதவும் என்று கணிக்கப்படுவதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.