தவெக தலைவர் விஜய்
கடந்த 32 வருடங்களாக தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகனாக வலம் வந்த விஜய் தற்போது தமிழக அரசியல் களத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு தொடங்கிய விஜய் மிக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார்.

உலகளவில் செய்த சாதனை?
ஓவ்வொரு கட்சிக்கு மட்டுமல்லாது பிரபலமாக இருக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) இருப்பது வழக்கமே. அந்த வகையில் உலகளவில் உள்ள நடிகர்களை ஒப்பிடும்போது நடிகர் விஜய்க்கு பெரிய அளவில் IT Wing மற்றும் PR Team இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இது அவரது அரசியல் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் எனவும் பலர் கூறுகின்றனர்.