விஜய்-ஷங்கர் கூட்டணி
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் விஜய், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஒரே திரைப்படம் “நண்பன்”. எனினும் இத்திரைப்படத்திற்கு முன்பே ஷங்கர் இயக்கிய “முதல்வன்” திரைப்படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம்தான் கூறினார் ஷங்கர். ஆனால் அந்த சமயத்தில் விஜய் அத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

மீண்டும் கதை சொல்லிய ஷங்கர்
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குனர் லிங்குசாமி ஒரு வாட்ஸப் குரூப்பை தொடங்கினாராம். அதில் ஷங்கர் உட்பட பல இயக்குனர்களை சேர்த்திருக்கிறார். அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு ஒன் லைனை கூற, அது ஷங்கருக்கு பிடித்துப்போயிற்று. அதன் பின் அதனை கதையாக மாற்றி நடிகர் விஜய்யிடம் அந்த கதையை கூறியிருக்கிறார் ஷங்கர்.

கதையை கேட்ட விஜய்க்கு மிகவும் பிடித்துப்போக, தான் நிச்சயம் நடிப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் ஷங்கரோ ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் கூறினாராம். அதாவது இந்த படத்தில் நடிப்பதற்கு ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இந்த நிபந்தனைக்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகுதான் இந்த கதையை ராம் சரணிற்கு கூறியிருக்கிறார். அத்திரைப்படம்தான் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள “கேம் சேஞ்சர்”.