தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கியிருக்கும் நடிகர் விஜய் அதன் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் .
இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு விஜய்யை மெர்சல் ஆக்கிவிட்டார்கள் .
இந்த மாநாட்டில் பேசிய விஜய் அரசியல் வருகை குறித்தும் ஊழல் மற்றும் தன்னுடைய அரசியல் கொள்கைகள் மற்றும் அரசியல் எதிரிகளாக தான் திமுகவை பார்க்கிறேன் மற்றும் யாரெல்லாம் ஊழல் செய்கிறார்கள் எந்த அரசாங்கம் சரியில்லை என்ன செய்ய வேண்டும் மக்கள் எப்படி இருக்க வேண்டும் இப்படி பல விஷயங்களை குறித்து மிகவும் தைரியமாக பேசினார் .
ஆக்ரோஷமாக விஜய் பேசிய அத்தனையுமே மக்களின் கவனத்தை ஈர்த்து அவரின் அரசியல் வருகை மீதான முழு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது .
கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் ரூ. 60 முதல் ரூ.70 கோடி வரை இந்த மாநாட்டிற்காக செலவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது .
இந்த நிலையில் விஜய் அரசியல் பிரவேசம் மற்றும் விஜய்யின் அரசியல் கருத்துக்கள் குறித்து பிரபலமான நடிகர் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது தலைவா திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் அதிக அளவில் வைரல் ஆகி வருகிறது .
அதாவது ஏ. எல் அழகப்பன் தயாரிப்பில் விஜய் அமலாபால் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் தலைவா .
இந்த திரைப்படம் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக கட்சியால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. படம் ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு மிகப்பெரிய பிரச்சனை எல்லாம் ஏற்பட்டது.
அதன் பிறகு மற்றம் மாநிலங்களில் ரிலீசான பிறகு தான் தமிழ்நாட்டில் ரிலீசானது. மேலும் படம் வெளியாகி படு மோசமான விமர்சனங்களை சந்தித்திருந்தது .
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஏ. எல் அழகப்பன் பேட்டியில் விஜய்க்கு நான் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என உங்களுக்கு தெரியுமா?
சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு அவர்களின் சம்பளத்தை பாதியை செக்காக கொடுப்போம் பாதி சம்பளத்தை பணமாக கொடுத்துவிடுவோம் .
இல்லையென்றால் 30 சதவீதம் வருமான வரி கட்ட வேண்டும். இது வருமான வரி அதிகாரிகளுக்கே தெரியும். நாங்களும் அப்படித்தான் வாங்குவோம்… அப்படித்தான் கொடுப்போம் .
அப்படி இருக்க விஜய்க்கு சம்பளத்தையே நாங்க பிளாக்ல தான் கொடுத்திருக்கோம். இப்படி விஷயம் இருக்கும்போது விஜய் ஊழலை பற்றி பேசலாமா?
அதற்கு அவர் தகுதியா? என நெட்டிசன்ஸ் பலரும் கேள்வி எழுப்பிய வருகிறார்கள். தற்போது தவறு செய்த விஜய்யே அட்வைஸ் கொடுத்திருப்பது தான் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது