விஜய் ஆண்டனி
தனது துள்ளல் இசையால் இளைஞர்களின் மனதை துள்ளி குதிக்க வைப்பவர் விஜய் ஆண்டனி. கடந்த 20 வருடங்களாக பல ஹிட் பாடல்களை கொடுத்து எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. மேலும் 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.
கன்னபின்னானு பாடுங்க…

இந்த நிலையில் பிரபல பாடகரான கிரிஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஒரு முறை ஒரு பாடலை கிரிஷின் குரலில் பதிவு செய்யும்போது “கிரிஷ் கன்னாபின்னான்னு பாடுங்க” என கூறினாராம். அவ்வாறு விஜய் ஆண்டனி இசையில் கிரிஷ் கன்னாபின்னா என பாடிய பாடல்தான் “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒரு சின்ன தாமரை பாடல்”. இப்பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது என்பதை நாம் பலரும் அறிவோம்.