வாரிசு நடிகர்கள்
பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ சினிமாவிற்குள் நடிக்க வருவது என்பது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் இந்த வழக்கம் உண்டு என்றாலும் பாலிவுட், டோலிவுட் போன்றவற்றை ஒப்பிடுகையில் கோலிவுட்டில் மிகவும் குறைவே. சமீபத்தில் தனுஷ் தனது சகோதரியின் மகனான பாவிஷை “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது டோலிவுட்டில் வரிசையாக பல தயாரிப்பாளர்களின் வாரிசுகள் புதுமுகங்களாக களமிறங்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
தயாரிப்பாளர்களின் வாரிசுகள்
அதாவது பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஃபைவ் ஸ்டார் செந்திலின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறாராம். பரத் நடிக்கும் “காளிதாஸ் 2” திரைப்படத்தில் ஃபைவ் ஸ்டார் செந்திலின் மகன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.
அதே போல் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமாரின் மகன் ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளாராம். விக்ரம் பிரபுவுடன் இணைந்து அவர் நடிக்கவுள்ளாராம். மேலும் விஜய் ஆண்டனியின் தங்கை மகனான அஜய் என்பவர் “ககன மார்கன்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.