கீர்த்தி சுரேஷ் திருமணம்
தென்னிந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழும் கீர்த்தி சுரேஷ், தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை நேற்று கோவாவில் வைத்து மணம் முடித்தார். கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில் திருமண நிகழ்ச்சியில் தென்னிந்திய சினிமா உலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. இப்புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

விஜய்-திரிஷா
இந்த நிலையில் நேற்று கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில் விஜய், திரிஷா ஆகிய இருவரும் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் கலந்துகொள்ள தனி விமானத்தில் கோவாவுக்குச் சென்றதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
Lovely couples #Thalapathi #Vijay and #Trisha ❤️
— R E P O R T E R ? N A H S R A H D (@imNAyrus) December 12, 2024
Went to Goa for #KeerthySureshMarriage ❤️pic.twitter.com/kBnR6libn1
மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனத்தின் பயணிகள் பட்டியலில் இருவரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
