கலவையான விமர்சனங்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களின் மத்தியில் கலவையான வரவேற்பையே பெற்று வருகிறது. “அஜித் திரைப்படம் போலவே இல்லை, அஜித்திற்கு மாஸ் ஆன காட்சிகள் இல்லை, First Half Slow, திரைக்கதை சொதப்பல்” என இத்திரைப்படம் பார்த்தவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியிருந்த ஸ்டோரி பல ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடுப்பேற்றிய விக்னேஷ் சிவன் ஸ்டோரி
அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த புராஜெக்டில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்துதான் அந்த புராஜெக்ட் மகிழ் திருமேனிக்கு கைமாறியது.

இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “சில நேரங்களில் சில விஷயங்கள் எப்படி ஒர்க் அவுட் ஆகும் என அதனை பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது நிச்சயம் மேஜிக் நிகழும்” என பதிவிட்டிருந்தார். அஜித்தின் பட வாய்ப்பு நழுவிப்போனதால்தான் விக்னேஷ் சிவன் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் என எண்ணிக்கொண்ட ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
