தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து டாப் ஹீரோயின் ஆக பலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். உயிர் உலக் என இரட்டை மகன்கள் தற்போது இருக்கிறார்கள். நடிகை நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாகவே பார்க்கப்பட்டு வருகிறார். பாலிவுட்டிலும் அவர் நடித்து வருகிறார் .
ஜவான் திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படியாக பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் வீடியோ புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் தனது இரட்டை மகன்களை தோளில் சுமந்து கொண்டு இரவு நேரத்தில் வாக் சென்ற ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட அதை பார்த்து நயன்தாரா ” Awww Cuties” என கமெண்ட்ஸ் செய்துள்ளார். இதை பார்த்த சில நெட்டிசன்ஸ் நல்லவேளை ரத்தமாரே பாட்டு போட்டு எங்க உயிரை எடுக்கல எனக்கு கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.