தனுஷ்- நயன்தாரா விவகாரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ தொடர்பாக நயன்தாராவுக்கும் தனுஷிற்கும் இடையே ஏற்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேச்சுப்பொருளாக இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் தனுஷ்,நயன்தாரா ஆகிய இருவருமே மாறி மாறி தாக்கி அறிக்கை வெளியிட்ட நிலையில் கோலிவுட் ரசிகர்களின் மத்தியில் இருவரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

சர்ச்சையில் சிக்கிய விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு வாங்க புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாரயணனை விக்னேஷ் சிவன் அணுகியுள்ளார். அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டது அமைச்சருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
“அரசு சொத்தை விலைக்கு கொடுப்பதாக இல்லை” என்று கூறியவுடன் “ஒப்பந்த அடிப்படையிலாவது தர முடியுமா?” என விக்னேஷ் சிவன் கேட்டிருக்கிறார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அமைச்சர் விக்னேஷ் சிவனின் கோரிக்கையை மறுத்துவிட்டார். விக்னேஷ் சிவன் இசை நிகழ்ச்சி நடத்த சீகல்ஸ் ஹோட்டலை விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.