பிரதீப் ரங்கநாதன்-விக்னேஷ் சிவன் கூட்டணி
“டிராகன்” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “LIK” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை நயன்தாரா,லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இதில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி கிசான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடியா?
சில நாட்களுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் இத்திரைப்படத்திற்கான பட்ஜெட்டை திடீரென அதிகரித்துவிட்டதாகவும் இதனால் லலித்குமாருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது ஒரு பாடல் காட்சியை படமாக்க விக்னேஷ் சிவன் ரூ.5 கோடி கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர் லலித்குமார் அதிர்ச்சியடைந்துள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.