நயன்தாராவின் திருமண வீடியோ:
நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிட்டியில் வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது அதன் ட்ரெய்லர் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நடிகை நயன்தாரா விக்னேஷ் இவனை தான் முதன்முதலில் பார்த்தபோது குறித்த அனுபவத்தில் பேசியிருக்கிறார்.
அதேபோல் விக்னேஷ் சிவனும் நயன்தாராவை பார்த்து அனுபவத்தை குறித்து பேசி இருக்கிறார். அதில் முதலில் நயன்தாரா கூறியதாவது, பாண்டிச்சேரி சாலையில் நானும் ரவுடிதான் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது என்னுடைய போர்ஷன் வருவதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.
நான் உத்தமன் இல்லை:
அப்போது திடீரென விக்னேஷ் இவனை நான் கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தேன். அப்போது அவர் ரொம்பவும் க்யூட்டாக அழகாக எனக்கு தெரிந்தார். இயக்குனராக அவர் காட்சிகளை விளக்கிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது என நயன்தாரா கூறினார்.
Also Read : மூஞ்சிய பார்க்க மாட்டாங்க… வயசானால் அது போய்டும் – தர்ஷா குப்தா!
நானும் ரவுடிதான் ஷூட்டிங் நிறைவடைந்த உடனே நயன்தாரா என்னிடம் வந்து இந்த படத்தின் சூட்டிங் மிஸ் செய்கிறேன் எனக் கூறினார். நானும் அவரிடம் ரொம்ப மிஸ் பண்ணுவதாக தெரிவித்திருந்தேன். இதை அடுத்து மேலும் பேசிய அவர் நான் ஒன்று உத்தமன் இல்லை எந்த பெண்ணையும் அவரது அழகு குறித்து யோசித்து பார்ப்பேன்.
ஆனால் நான் நயன்தாராவை அப்படி ஒரு கோணத்தில் பார்க்கவே இல்லை. இதுதான் இந்த காதலை தொடர்ந்து திருமண வரை கூட்டி சென்றது என விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் கூற இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.