வெளியானது விடுதலை பார்ட் 2
சூரி கதாநாயகனாக நடித்து வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை பார்ட் 1” திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து “விடுதலை பார்ட் 2” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் சூரியை மையமாக வைத்து கதை நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் வாத்தியார் கதாபாத்திரமான விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

X தள விமர்சனம்
இந்த நிலையில் இன்று ரசிகர்கள் பலரும் காலை முதல் காட்சியை திரையரங்குகளில் சென்று கண்டுகளித்தனர். அந்த வகையில் “X” தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.




