விடுதலை-1
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “விடுதலை”. இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, “விடுதலை” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நாயகனாக இடம்பிடித்தார்.

விடுதலை 2
“விடுதலை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “விடுதலை 2” திரைப்படம் வருகிற 20 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டு “A” சான்றிதழ் வழங்கியிருக்கிறது. மேலும் இத்திரைப்படம் நீளம் 2 மணிநேரம் 50 நிமிடங்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.