அதிவேகத்தில் விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ஜனவரி 1 ஆம் தேதி ரசிகர்களின் தலையில் இடி விழுந்தது போல் “விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவராது” என்ற அறிவிப்பு வந்தது. இதனை தொடர்ந்து இத்திரைப்படம் ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பால் இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளும் வேகமெடுத்துள்ளன.

வியாக்கிழமை செண்டிமண்ட்
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தின் டிரைலர் வியாழக்கிழமையான இன்று மாலை 6.40 மணியளவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. எப்போதும் அஜித் திரைப்படங்கள் வியாக்கிழமை ஒட்டிதான் வெளியாவது வழக்கம்.

அஜித்திற்கு வியாக்கிழமை சென்டிமண்ட் பெரிதளவில் ஒர்க் அவுட் ஆகும் என கூறப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது டிரைலர் கூட வியாழக்கிழமையை ஒட்டி வெளியாக உள்ளது. மேலும் “விடாமுயற்சி” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.