இன்னும் மூன்று நாட்களில்…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப் பிறகு அஜித்குமார் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளார்கள். இத்திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் புயல் வேகத்தில் விற்று வருகிறது.

விடாமுயற்சி வெளியாவதில் சிக்கல்…
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படம் குறித்து திடீரென வெளியான ஒரு செய்தி அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “விடாமுயற்சி” திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான “Breakdown” என்ற திரைப்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை Paramount Pictures என்ற பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த விவகாரத்தில் லைகா நிறுவனத்திற்கும் Paramount Pictures நிறுவனத்தாருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் Paramount Pictures நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் ஒரு குறிப்பிட்டத் தொகையை அளிக்க முடிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. அந்த வகையில் இன்னும் 13 கோடி ரூபாய் லைகா நிறுவனம் பாக்கி வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.