பொங்கல் ரிலீஸ்
“விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸின்ட்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.
Sawadeeka
நேற்று “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான Sawadeeka பாடல் வெளியானது. இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். ஆண்டனி தாசன் இப்பாடலை பாடியுள்ளார். மிகவும் Peppy ஆக உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.

Pre Booking-ல் சாதனை
“விடாமுயற்சி” திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் வெளிநாடுகளில் இத்திரைப்படத்தின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை வெளிநாட்டு முன்பதிவில் ரூ.20 லட்சத்திற்கும் மேல் வசூல் பார்த்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸிற்கு முன்பே “விடாமுயற்சி” திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.