நாளை வெளியாகும் விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாளை வெளியாக உள்ள இத்திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பெருவாரியாக விற்றுத்தீர்ந்தன.

சுத்தமா புரோமோஷனே இல்லை…
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படம் குறித்து ஒரு அதிருப்தி செய்தி வெளிவந்துள்ளது. அதாவது வெளிநாடுகளில் வட அமெரிக்காவை தவிர்த்து வேறு எந்த நாடுகளிலும் விடாமுயற்சியின் பிரீமியர் காட்சி திரையிடப்படவே இல்லையாம். அதே போல் இத்திரைப்படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் புரோமோஷன் பூஜ்யம் என்ற நிலையில் உள்ளதாம். இது இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் கூறப்படுகிறது.