வெளியானது விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் காலை காட்சி கலைகட்டியுள்ளது. அந்த வகையில் இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வரும் விமர்சனங்களை குறித்து இப்போது பார்க்கலாம்.

“விடாமுயற்சி” திரைப்படத்தின் Climax வெறித்தனமாக இருப்பதாக ஒரு ரசிகர் டிவிட் செய்திருக்கிறார்.

“அனைத்து விதமான ரசிகர்களுக்கும் ஏற்புடைய திரைப்படம் இது, First Half Class, Second Half Mass” என்று ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.

“முதல் பாதி முழுவதும் ரொமாண்டிக்கான காட்சிகள் இருக்கின்றன. திரிஷா மற்றும் அஜித்திற்கு இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. அதன் பிறகு படம் வேகம் எடுக்கிறது. அனிருத் தரமான சம்பவம் பண்ணிருக்கார். Breakdown-ஐ விட நன்றாக இருக்கிறது” என ஒரு ரசிகர் டிவிட் செய்திருக்கிறார்.

மற்றொருவர் “விடாமுயற்சி-வீண்முயற்சி” என நெகட்டிவாக விமர்சித்திருக்கிறார்.

இன்னொருவரும் “வீணானமுயற்சி, ஒளிப்பதிவும் இசையும் சிறப்பு” என விமர்சித்திருக்கிறார்.
