பொங்கல் ரிலீஸ்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸின்ட்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தள்ளிப்போகிறதா ரிலீஸ்?
“விடாமுயற்சி” திரைப்படத்தின் சென்சார் காட்சி நாளை திரையிடப்பட உள்ளதாம். ஆனால் கிறுஸ்துமஸ் விடுமுறை என்பதால் வெளிநாட்டில் இப்போதைக்குள் சென்சார் வாங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாம். ஆதலால் “விடாமுயற்சி” திரைப்படத்தை ஜனவரி 14 ஆம் தேதியன்று வெளியிட படக்குழு தீவிரமாக யோசித்து வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஏங்கி கிடக்க, ஒரு வழியாக ஜனவரி 10 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தள்ளிப்போவதாக வெளிவரும் செய்திகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.