பொங்கல் ரிலீஸ்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஒன்று வெளிவந்தது. அப்பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

திடீரென வெளியான அதிர்ச்சி செய்தி
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படத்தை குறித்தான ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தின் சென்சார் Copy கூட இன்னும் தயாராகவில்லை என்பதால் இத்திரைப்படம் தாமதமாக வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.