விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் “விடாமுயற்சி” திரைப்படம் இன்னும் சென்சார் copy கூட தயாராகவில்லை என வெளிவந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகவும் வெளிவந்த தகவல் ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியது போல் ஆனது.

Good News
இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது “விடாமுயற்சி” திரைப்படத்தை 10 ஆம் தேதி வெளியிட படக்குழு தீவிரமான உழைப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழுவினர் உறக்கமே இல்லாமல் இரவு பகல் பாராமல் “விடாமுயற்சி” வெளியீட்டிற்காக புயல் வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.