சுமாரான வரவேற்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. அஜித்குமாரின் வழக்கமான திரைப்படம் போல் பல மாஸ் காட்சிகள் இதில் இடம்பெறவில்லை என்பதால் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து படம் வெளியாவதற்கு முன்பே ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மகிழ் திருமேனி.

இவங்களுக்குலாம் படம் பிடிக்காது…

சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய சித்ரா லட்சுமணன், “விடாமுயற்சி திரைப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் கவரவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அப்படி எல்லோரையும் கவர்ந்த படமாக விடாமுயற்சி இருக்காது என்று சாய் வித் சித்ரா நேர்காணலிலேயே இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்திருந்தார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.