கலவையான விமர்சனம்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. காலை காட்சியில் ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்து இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இதுவரை முதல் காட்சி மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஒன்னுமே புரியலைங்க…
திரையரங்கில் இருந்து வெளிவந்த ஒரு ரசிகர் ஒரு யூட்யூப் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தபோது, “நல்லா இருக்குனு சொல்ல முடியல, நல்லா இல்லைனும் சொல்லமுடியல, எனக்கு என்ன சொல்றதுனே புரியல. ஆனால் டைம் போனதே தெரியல, Twist எல்லாம் நன்றாகவே இருந்தது” என கூறினார்.
அதே போல் மற்றொருவர், “First Half கொஞ்சம் மெதுவாதான் போகுது. ஆனா Second Half நல்லா திரில்லிங்கா போகுது. ஒரு சாதாரண Family Man தன்னோட மனைவிக்காக பண்ற விஷயங்கள்தான் படமே. நல்லா இருக்கு. மங்காத்தாவை மனசுல வச்சிக்கிட்டு இந்த படம் பாக்காதீங்க” என கூறினார்.
தூங்கிவிட்டோம்…
திரையரங்கில் படம் பார்த்து முடித்து வந்த வேறொரு ரசிகர், “பரவாயில்லை, படம் பார்க்கும் அளவுக்கு இருக்கிறது, கதை பழசுதான், ஆனால் அஜித்திற்காக பார்க்கலாம். ஆனால் நாங்கள் சில காட்சிகளில் தூங்கிவிட்டோம்” என கூறினார்.

மேலும் மற்றொருவர், “படம் Mass ஆ லாம் இல்லை, ஆனா படம் நல்லா இருக்கு அவ்வளவுதான்” என கூறினார். இவ்வாறு “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே ரசிகர்களிடமிருந்து வருகின்றன.