விடாமுயற்சி ரிலீஸ்
பல நாட்களாக அஜித் ரசிகர்கள் “விடாமுயற்சி” திரைப்படத்தின் அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் படக்குழுவோ எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது. எனினும் சில நாட்களுக்கு முன்பு “விடாமுயற்சி” திரைப்படத்தின் டீசருடன் வெளியீட்டு தேதியின் அறிவிப்பும் வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் குஷியாயினர்.
முதல் சிங்கிள் பாடல்
இதனை தொடர்ந்து “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “Sawadeeka” இன்று மதியம் வெளிவரும் என இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் அப்பாடலின் ஆடியோ மட்டுமே வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்தனர்.

Lyrical Video
இந்த நிலையில் தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “Sawadeeka” பாடலின் Lyrical Video வெளிவந்துள்ளது. அனிருத் இசையில் இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். ஆண்டனி தாசன் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் அஜித்குமார், திரிஷா இடம்பெறும் ஒரு ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ளது.