பொங்கல் வெளியீடு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளிவருவதாக அறிவிப்பட்டுள்ளது. பல நாட்களாக “விடாமுயற்சி” திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஏங்கிகிடந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு “விடாமுயற்சி” திரைப்படத்தின் டீஸரும் வெளியீட்டு தேதியும் வெளிவந்து ரசிகர்களை குஷி ஆக்கியது.

மீண்டும் ஏமாற்றம்
“விடாமுயற்சி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “Sawadeeka” பாடல் இன்று மதியம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் இப்பாடலுக்காக காத்திருந்த நிலையில் இப்பாடலின் ஆடியோ மட்டுமே தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் இப்பாடலின் Lyrical Video இன்று மாலை 5.05 மணிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
Get tripping with #Sawadeeka ❤️ The first single from VIDAAMUYARCHI is OUT NOW ?? on all audio platforms. ? And that's not all, catch the Lyric Video coming your way at 5:05 PM. ?
— Lyca Productions (@LycaProductions) December 27, 2024
? https://t.co/VQykE9YcAe
An @anirudhofficial musical ?
Sung by @anthonydaasan ?️
Written by… pic.twitter.com/aTAFMfj8F8